செய்திகள்

நாளை பைசர் தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கைக்கு.!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை சீனாவின் பீஜிங்கில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த தடுப்பூசிகள், அரச ஒளடதங்கள் கட்டுப்பாட்டு நிறுவகத்திடம் கையளிக்கப்பட்டு, பின்னர், அரச மத்திய ஒளடத களஞ்சியத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரை 5.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். மேலும் இரண்டு மில்லியன் சைனோபார்ம்தடுப்பூசிகள் ஜூலை மாதத்திற்கு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

அத்துடன், இலங்கைக்கு நாளை பைசர் தடுப்பூசியின் முதல் தொகுதி கிடைக்கவுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி 26ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அடுத்த வாரம் மேலும் 26,000 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு மேலும் 200,000 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தவிர ஒரு தொகை மொடனா தடுப்பூசிகள் எதிர்காலத்தில் இலங்கைக்குக் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button