செய்திகள்

நாளை மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இடம்பெறுமா.?

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தீர்மானத்திற்கமைய நாளை மாகாணங்களுக்கிடையில் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து இராஜங்க அமைச்சர் கூறினார்.

எனவே, நாளை தினமும் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Back to top button