செய்திகள்

நாளை முதல் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாளை (12/07) முதல் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்பிரகாரம், ரயில் சேவைகளின் எண்ணிக்கையை 12 இனால் அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி சேனரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை முதல் 103 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுப்படும் பொது மக்கள் தேவையற்ற பயணங்களை முடிந்தளவிற்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ரயில் நிலையத்தில் தேவையற்ற வகையில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளவும். ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை ரயில் நிலையத்திற்குள்ளும், ரயிலுக்குள்ளும் பொது பயணிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

Related Articles

Back to top button