செய்திகள்

நாளை முதல் வழமையான பணிக்கு திரும்பும் அரச ஊழியர்கள்!

நாடளாவிய ரீதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்தோடு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.

அதன்படி நாளை முதல் அரச ஊழியர்கள் வழமை போன்று பணிக்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அரச சேவை பிரமாணம் செய்து நாளைய தினம் கடமைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button