செய்திகள்

நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்

ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரு வாரத்திற்குள் பதவி விலக கோரி நாளைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளதாக அதன் இலங்கை ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்.உதயரூபன் தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பில் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் விடுமுறை தொடர்பில் எந்தவித அறிவுறுத்தல்களும் வழங்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button