செய்திகள்

நாவலபிட்டி, நுவரெலியா உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் இன்றும் திறக்கப்பட்டன.!

சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் திறக்கப்பட்டன. மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, தம்புளை, தம்புத்தேகம, நுவரெலியா, கெப்பட்டிப்பொல, நாராஹென்பிட்டி, மீகொட, பிலியந்தலை, இரத்மலானை, வேயங்கொ, வெலிசற மற்றும் நாவலபிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய திறக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவை மற்றும் நடமாடும் விற்பனையாளர்கள் தங்களின் அனுமதிப்பத்திரத்தை காண்பித்து பொருளாதார மத்திய நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com