...
செய்திகள்

நாவலப்பிட்டியில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு பெண் பரிதாபமாக பலி

நாவலப்பிட்டி நகரில் நேற்று இ.போ.ச பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்ட பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நாவலப்பிட்டி நகர் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கருகில் இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

கினிகத்தேனை பேரகாமுல்ல  பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதையடுத்து பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:வீரகேசரி

Related Articles

Back to top button


Thubinail image
Screen