கல்விசெய்திகள்

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் மூன்று திறன் வகுப்பறைகள் இன்று திறந்துவைப்பு …

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை, இந்திய சமுதாய பேரவையின்    ஏற்பாட்டில் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரிக்கு நவீன முறையிலான மூன்று  திறன் வகுப்பரைகள் இன்றைய தினம் இராஜாங்க அமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.


மேலும் மலையகத்திலுள்ள அதி கஷ்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை இனம் கண்டு அப்பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பௌதீக வள பற்றாக்குறைகளை படிப்படியாக அபிவிருத்தி செய்வதே இலங்கை இந்திய சமுதாய பேரவையின் நோக்கமாகும்.
இதன்போது  உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பெருந்தோட்ட பாடசாலைகளை  முதலில் அபிவிருத்தி செய்ய வேன்டும்  அத்தோடு  மாணவர்கள் பாடசாலைகளில் கல்வி கற்கும்போதே  தங்களது தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் அபிவிருத்திகளை வளர்த்துக்கொள்ளவேன்டும்.


அத்தோடு நகரங்கள் தோரும் நூலகங்களை அமைக்கும் திட்டங்களை நாங்கள்  முன்னெடுத்துள்ளோம் வெகு விரைவில் அதையும் நடைமுறைப்படுத்துவோம்நாவலப்பிட்டி நகரத்திலும் நூலகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை, இந்திய சமுதாய பேரவையின் தலைவர் ராஜு சிவராமன் ,மற்றும் அங்கத்தவர்கள் ,சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com