செய்திகள்

நிதியமைச்சராக பதவியேற்றார் பசில் ; மஹிந்தவுக்கு புதிய பதவி

நிதியமைச்சராக பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் நிதியமைச்சராகவிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை என்ற புதிய அமைச்சு விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button