செய்திகள்

நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது!

நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 21 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரும் 4 பெண்களும் 16 ஆண்களும்இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள

காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள்இ நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்துக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் வீதியில் உள்ள இரண்டு நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை அவர்கள் அவ்விடத்திலிருந்து நிதியமைச்சு மற்றும் திறைசேரி ஆகியவற்றுக்கான இரண்டு நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button