...
செய்திகள்

நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து தோட்ட தொழிலார்களின் போராட்டம் நீடிப்பு

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களை கொண்ட 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (13.12.2021) தொழிலுக்குச் செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இன்றும் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும், தற்போது தேயிலை மலைகள் காடாகி கிடப்பதால் 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தே பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அத்தோடு, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்குவதனால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நிம்மதியற்று வாழ்ந்து வருகின்றோம்.பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தமக்கு சாதகமான பதிலை பெற்றுத் தருமாறு கோரியும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் கட்டாயமாக வேண்டும் என வலியுறுத்தியும், தோட்டத் தொழிலாளர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen