விளையாட்டு

நியுஸிலாந்துக்கு எதிர் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு.

நியுஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் முன்னாள் அணித்தலைவர் தினேஸ் சந்திமால், லசித் அம்புல்தெனிய மற்றும் அகில தனஞ்சய ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்த தொடர் அமையவுள்ளதுடன் இலங்கையும் நியுசிலாந்தும் முதல் தடவையாக மோதவுள்ளன .

தொடரின் முதல் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 22 பேர்கொண்ட குழுவினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர்கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாம. குழு விபரம் பின்வருமாறு, 

திமுத் கருணாரத்ன (தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, ஓசத பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ.

Related Articles

Back to top button
image download