...
செய்திகள்

நியூசிலாந்தின் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்தியவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நியூசிலாந்தின் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆடன் தெரிவித்துள்ளார்.
 அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்டிருந்த அவரின் பெயரை வெளியிட நியூசிலாந்து விரும்பவில்லை.
2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ள இந்த நபர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியவராக கருத்தப்பட்டுள்ளார்.
தீவிர கண்காணிப்பு வலயத்தில் இருந்தபோதே இவர் இன்று மக்கள் மீது தாக்குதலை நடத்தி 6 பேரை படுகாயமடைய செய்துள்ளார்.

Sent from my Huawei phone

Related Articles

Back to top button


Thubinail image
Screen