செய்திகள்நுவரெலியாமலையகம்

நிரந்த குடியிருப்புக்காக ஹட்டன் போடைஸ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்..

ஹட்டன் போடைஸ் தோட்ட மக்கள் தங்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்குமாறு கோரி இன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம்  29 ஆம் திகதி ஹட்டன் போடயஸ் லயன் குடியிருப்பில் தீப்பற்றியிருந்தது.

இதனால் இந்த குடியிருப்பின் 20 குடியிருப்புகள் தீக்கிரையானது.
இதன்போது அந்த குடியிருப்பில் வசித்த 19 குடும்பங்களை சேர்ந்த 105 பேர்  தற்காலிகமாக போடைஸ் மைதானத்தில் தங்க வைப்பட்டனர்.

இந்நிலையில், தமக்கான நிரந்தர குடியிருப்புகள் இதுவரை பெற்று தரப்படவில்லை என தெரிவித்து தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பட்டம் போடைஸ் தேயிலை தொழிற்சாலை முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பட்டத்தினால், ஹட்டன் – டயகம பிரதான வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

Related Articles

Back to top button