செய்திகள்

நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்த 89 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.?

நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்த 89 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் ஆயிரத்து 430 வியாபார நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 512 வர்த்தகர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

சம்பா மற்றும் நாட்டரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையாக 98 ரூபாவை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த புதிய விலைத்திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அதிக விலையில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download