மலையகம்

நிறுத்தி வைக்கபட்ட பேருந்தை மோதிவிட்டு சென்ற லொறியின் சாரதி கைது

அரச பேருந்தின் மீது மோதிவிட்டு சென்ற லொறி வண்டி சந்தேக நபரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை இன்று பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் நேற்று இரவு வீதி ஓரமாக நிறுத்தி வைக்கபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்த மான பலாங்கொட பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த சிறிய ரக லொறி வண்டியே இவ்வாறு நிறுத்திவைக்கபட்டிருந்த பேருந்து மீது மோதி விட்டு சென்றமையினால் அரச பேருந்துக்கும் லொறி வண்டிக்கும் பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் அரச பேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டினை பதிவு செய்துள்ளதோடு பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொகவந்தலாவ பொலிஸார் பேருந்தை சேதபடுத்தியவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த லொறி வண்டியின் சாரதியின் கையடக்க தொலைபேசியை தவறவிட்டு சென்றுள்ளது.

DSC08578

அத்துடன், தவறவிட்ட கையடக்க தொலைபேசியை குறித்த லொறிவண்டியின் சாரதி தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளதாகவும் லொறிவண்டியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்ட காரணத்தினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சேதத்துக்கு உள்ளான அரச பேருந்து அட்டன் பேருந்து சபைக்கு சொந்தமானது எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த லொறியையும் சாரதியின் கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சாரதியை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

DSC08579

DSC08583

DSC08584

DSC08586

Related Articles

2 Comments

  1. I have been exploring for a little for any high quality articles or blog posts on this sort of house . Exploring in Yahoo I finally stumbled upon this site. Studying this information So i’m satisfied to convey that I’ve an incredibly excellent uncanny feeling I came upon exactly what I needed. I most no doubt will make sure to don’t fail to remember this site and give it a glance regularly.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button