செய்திகள்

நிலக்கடலை மற்றும் சோளம் இறக்குமதிக்கு தடை..?

நிலக்கடலை மற்றும் சோளம் இறக்குமதிக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் முற்றாக தடை விதிக்கப்படவுள்ளது.

விவசாய திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்,சோள இறக்குமதிக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்ட போதிலும், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை இறக்குமதி செய்யுமாறு விவசாய திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

வருடாந்தம் நாட்டிற்கு 4 இலட்சம் மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படுவதுடன், 2 இலட்சம் மெற்றிக்தொன் நிலக்கடலை பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாகவும் விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button