செய்திகள்

நிஸ்ஸங்க சேனாதிபதியின் பிணை மனு நிராகரிப்பு.

முன்னாள் எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க  சேனாதிபதி தாக்கல் செய்த பிணை மனுவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று  நிராகரித்துள்ளது.

எவன்கார்ட் கப்பலினுள் உரிமம் இன்றி 813 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 2 இலட்சத்து 935 தோட்டக்களை வைத்திருத்தல் உள்ளிட்ட 7573 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதி ஒருவரான எவன்கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவே கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்  நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதிவாதியை பிணையில் விடுவிப்பதற்கான சிறப்பு விடயங்கள் எவையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்து நீதிபதிகள் குறித்த மனுவை நிராகரித்துள்ளனர்.

எவன் கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கடந்த மாதம் 17 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

சிங்கப்பூரில் இருந்து வந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ468 ரக விமானத்தில் இலங்கை வந்திருந்த போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button