தொழில்நுட்பம்

நீங்கள் 1990-களில் பிறந்தவரா? உங்களது பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்லும் ரேஸிங் கேம்கள் இவைதான்!

ரோடு ரேஷ் (1991)
1990-களில் பிறந்தவராக இருந்துவிட்டு, ரோடு ரேஷ் (Road Rash) கேமை இதுநாள் வரையில் விளையாடியது இல்லை என்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அத்தியாவசிய விஷயம் ஒன்றை இழந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். ”Vehicular Combat Racing” பிரிவில் வரும் இந்த விடியோ கேம், எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் (Electroni Arts) நிறுவனத்தின் தயாரிப்பாகும். MB அளவில் இது மிகக் குறைவாகவே இருந்ததால், 1 ஜிபி ரேம் உடன், கிராஃபிக்ஸ் கார்டு கூட இல்லாத கம்ப்யூட்டர்களில்கூட இந்த கேம் சிக்கலின்றி செயல்பட்டது. 1990-களில் தங்களது டீன் ஏஜ் பருவத்தில் இருந்த பலருக்கும், தங்களுக்குள் இருந்த கேமரை உணர்த்தியது ரோடு ரேஷ்தான்.
பழமையான ரேஸ் டிராக், சாலைகளில் செல்லும் நபர்கள்/வாகனங்களின் மீது மோதுவது, நம்முடன் ரேஸ் ஓட்டுபவர்களை மிதித்துத் தள்ளுவது, சாலையில் வேகமாக பைக் ஓட்டியதற்காக நம்மைத் துரத்தும் போலிஸ்காரரை பேஸ்பால் பேட் – சைக்கிள் செயின் போன்ற ஆயுதத்தால் தாக்குவது என ஒரு பக்கா பேக்கேஜாக இருந்தது ரோடு ரேஷ். இந்த கேமின் மியூசிக், ரேஸர்களின் பெயர்கள், கேம் அமைக்கப்பட்ட விதம் ஆகியவை, காலங்களைக் கடந்தும் மறக்கமுடியாதவை என்றால் அது மிகையில்லை!
ரோடு ஃபைட்டர் (1984)
1900-களில் பிறந்தவர்கள், தமது வாழ்க்கையின் 15 வருடங்களுக்கு முன்னால் சென்றால், ரோடு ஃபைட்டர் கேமின் 8 பிட் MIDI சத்தம், உங்கள் காதுக்குள்ளே இந்நேரத்தில் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கும். ஸ்கிரீன் சைஸ் சிறிதாக இருந்தாலும், அளவில் பல்க்காக இருக்கும் CRT வகை டிவிக்களில், விடியோ கேம் செட்டை கனெக்ட் செய்து, ஜாய் ஸ்டிக்கை ஒற்றைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடினால், நேரம் செல்வதே தெரியாது. Arcade வகை விடியோ கேமான இதை, Konami நிறுவனம் தயாரித்திருந்தது.
மிட் டவுன் மேட்னெஸ் (1999)
Blitz, Circuit, Checkpoint, Cruise – இந்த வார்த்தைகளை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா? இவைதான் மிட் டவுன் மேட்னெஸ் (Mid Town Madness) கேமில் இருந்த சிங்கிள் ப்ளேயர் மோடுகள் ஆகும். Arcade வகை விடியோ கேமான இது,  மனநிறைவைத் தருவதில் பெயர் பெற்றது. சிகாகோ நகரத்தில் அமைக்கப்பட்ட இந்த கேமின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஸ்ட்ரீட் ரேஸில் பங்கேற்று, அதில் வெற்றி பெற்று போட்டியாளர்களின் காரைப் பெறுவதுதான். க்ரூஸ் மோடில் கார் ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது.
தவிர நெரிசம் மிகுந்த சாலைகளில், நமக்குப் பிடித்தமான ஃபோக்ஸ்வாகன் பீட்டில் முதல் சிட்டி பஸ்/டிரக் வரை எதை வேண்டுமானாலும் நாம் ரேஸில் ஓட்டலாம். எனவே சாலையில் செல்பவர்கள் குழம்பிப் போவார்கள். அதைப் பார்த்து நாம் அவர்கள் மீது வாகனத்தை ஏற்ற முயன்றால், அவர்கள் எஸ்கேப் ஆகும் விதம் அழகு. விண்டோஸ் இயங்குதளத்துக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த விடியோ கேமை, ஏஞ்சல் ஸ்டூடியோஸ் (Angel Studios) வடிவமைத்திருந்தது. தவிர மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் இதனை வெளிக்கொண்டுவந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button