செய்திகள்

நீண்ட வார இறுதி-எச்சரிக்கும் இராணுவத் தளபதி ..

எதிர்வரும் நீண்ட வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்று கூடினால் ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் குறைவடையாத நிலை உள்ளதால் மக்கள் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட வார இறுதி நெருங்கி வருவதைக் குறிப்பிட்ட, இராணுவத் தளபதி, கொரோனாவின் மூன்றாம் அலை புத்தாண்டு காலத்தில் தொடங்கியதை நினைவுபடுத்தியுள்ளார்.

இது போன்ற நீண்ட வார இறுதிகளில் மக்கள் ஒன்று கூடினால் நிலைமை ஆபத்தானதாக மாறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

நன்றி தமிழ்மிரர்

Related Articles

Back to top button