அரசியல்செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு விசாரணை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ?

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்ஞன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்றூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் களைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையினரன் ஆதரவு அப்போதைய அரசாங்கத்திற்கு கிடைக்கும் என ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக கூறியதனூடாக நீதிமன்றம் அவமதிப்புக்குள்ளாகியுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதற்கமைய நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக உயர்நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button