செய்திகள்

‘நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது.’ பாரதவின் மனைவி சாபம்.!

“கொலையாளி விடுவிக்கப்பட்டான் – நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது.”

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை அவமதித்து நீதித்துறையை மதிக்காத ஒரு நாடாக இலங்கை மாறியுள்ளது என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

மிகவும் புனிதமான போசன் தினத்தன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button