மலையகம்

நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணவில்லை : தேடும் பணியில் பொலிசார்

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இந்த சம்பவவம் நேர்ந்துள்ளது.

இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனாவர் சுவாரபுர பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என தெரியவந்துள்ளது.

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி கித்துல்கல பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கித்துல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

81 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button