செய்திகள்

நீரிழிவு பரிசோதனைகளை இலவசமாக வழங்கிய MYDOCTOR.LK

 

உலக நீரிழிவு தினமான நவம்பர் மாதம் 14ம் திகதி உலகளாவிய ரீதியில் இந்த நீரிழிவு பற்றிய பேச்சாகவே இருந்தது.நீரிழிவானது தொற்றுநோய் அல்லாததும் உலகத்தில் வியாபித்துவரும் ஒன்றாகும். இலங்கை உட்பட எங்களுக்கு அதாவது ஆசிய கண்டத்தில் அதிகமாக பாதிப்பு காணப்படுவது டைப் 02 என்று சொல்லப்படும் நீரிழிவு வகையிலாகும். இந்த நீரிழிவானது சாதாரணமாக குருதில் அதிக குளுகோஸை அதிகரிப்பதோடு இது பல பிரச்சனைககளை உருவாக்குகின்றது குறிப்பாக .இது உடலில் முக்கிய அவயங்களான கண் பார்வையை இழக்கசெய்திடும் ,சிறுநீரக பாதிப்பு ,கால் பாதங்கள் உணரவற்று போதல் ,அதே நேரம் மாரடைப்புக்கு அதிகவாய்ப்புகளை இது ஏற்படுத்துகின்றது. ஒரு புள்ளிவிபரம் ஆபத்தான தகவல் ஒன்றை குறிப்பிடுகின்றது 30-40 வீதமானோர் தங்களுக்கு நீரிழிவு இருபத்தைப்பற்றி அறிந்திடாதவர்களாகவும் அவர்கள் தங்களை பரிசோதனை செய்துகொள்ளாதவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கின்றது.

உலக நீரிழவு தினத்தையொட்டி நீரிழிவு பற்றி தெரியாதவர்களுக்கு அதன் பாதிப்புகள் எவ்வளவு பாரதூரமானது என தெளிவு படுத்தும் நோக்காக இலங்கையின் முதலாவது நவீன டிஜிட்டல் முறையில் வைத்திய சேவைகளை வழங்கும் MYDOCTOR.LK  அவர்களோடு ஹெல்த்தி லைப் நிறுவனம் மற்றும் Dibabitasol என்பன இணைந்து கடந்த 25ம் திகதி இலவச நீரிழிவு தொடரான பரிசிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை பம்பலப்பிட்டி தொடர் மாடி சமூக மையத்தில் நடித்தியது.

இதன் நோக்கம் தனிப்பட்ட ஒருவர் தனக்கு நீரிழவு இருபத்தைப்பற்றி அறிந்துகொள்வதாகும்,அதன் அடிப்படையில் இங்கு இலவசமாக முழுமையான வைத்திய பரிசோதனைகள் உட்பட குருதி பரிசோதனை (blood sugar test ) ,பிரஷர் (B.P),மற்றும் கால் பராமரிப்பு (foot care,neuropathi) பரிசோதனைகளும் செய்யப்பட்டன.கண் பரிசோதனை செய்தவர்களில் அவசியமானவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.அதே நேரம் உணவு கட்டுப்பட்டாளர்களிடம் ஆரோக்கியமான உணவு பற்றி அறிவுரைகளும் அங்கு வந்தவர்களால் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது.

மேலும் இலங்கையின் வைத்திய துறையில் புதிய பரிணாமத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறையிலான காணொளி தொடர்பாடல் மூலம் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் மூலம் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அதே நேரம் ஆரோக்கியமான உணவு தயாரிப்பு முறைகளும் இங்கே செய்து காட்டப்பட்டதோடு அங்கே தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கும் வழங்கப்பட்டன.

ஒரு வெற்றிகரமான ஆரோக்கிய நிகழ்ச்சி திட்டத்தை மக்களுக்கு வழங்க Diabetasol மற்றும் டொக் 990 ஹெல்த்தி லைப் நிலையம் இவர்களோடு விஷன் கேயரும் இணைந்துகொண்டனர்.

mydoctor .lk பேஸ்புக் மூலம் நடத்திய பரிசு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆரோக்கிய பாவனை பொருட்கள் இங்கே பரிசாக வழங்கப்பட்டன .நவீன முறையில் வைத்தியர்களை அணுகுவதற்கு வசதியான முறையில் தொழிநுட்பத்தோடு இலங்கையின் வைத்திய துறையில் mydoctor .lk தடம் பதித்திருக்கின்றது. அத்தோடு தனது சேவையை 24 மணிநேரமும் பேற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button