தொழில்நுட்பம்

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், இந்த வருடத்தில் உயர் மட்டத்தை அண்மித்துள்ளதாக
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்காரணமாக நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 100 வீதமாகவும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94 தசம் 6 வீதமாகவும், மவுசாக்காலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 90 தசம் 5 வீதமாகவும் அதிகரித்தள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 87 தசம் 7 வீதமாக உயர்வடைந்துள்ளது.

Related Articles

Back to top button
image download