செய்திகள்

நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவர் பலி!

மாவனல்லை பகுதியில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாவனல்லை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வேளையில் குறித்த மாணவர் நீர்வீழ்ச்சியின் கரையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குண்டசாலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button