செய்திகள்

நுகர்வோருக்கு பொருத்தமற்ற உணவை விற்பனை செய்வோரை சுற்று வளைக்க ஆரம்பம்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு வகைகளை விற்பனை செய்வோரை இணங்காண்பதற்கான விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களையும் இலக்காக கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் காலாவதியான உணவுப்பொருட்களை மீள சந்தைக்கு விநியோகிக்கும் மற்றும் தரமற்ற உணவு வகைகளை உற்பத்தி செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சபை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download