செய்திகள்
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ராஜினாமா?
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் பதவி விலகியுள்ளார்.
அந்த பதவியில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் (ஓய்வு) சாந்த திஸாநாயக்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜித ஹேரத் தனது பதவியை இராஜினாமா செய்ததுடன் குறித்த பதவிக்கு முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.