நுவரெலியாமலையகம்

நுவரலியா மாவட்டத்துக்கு அபாய எச்சரிக்கை!

பலத்த மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா, கொத்மலை, அம்பகமுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியதை அடுத்து நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் நிறுவகம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்சரிவிற்கான ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை வெளியேறுமாறும் அறிவுருத்தப்பட்டுள்ளனர்.

நிலம் தாழிறங்கள், கற்பாறைகள் சரிந்தல் மற்றும் நிலத்திலிருந்து திடீரென ஊற்றுகள் ஏற்படுதல் குறித்த அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button