...
செய்திகள்

நுவரெலியாவிற்கு உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு ,கொரோனா விதிமீறல்.

கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா நகருக்கு வருகைத்தந்து நகர் எங்கும் சுற்றி திரிந்தனர்.

வருகைத் தந்த சுற்றுலா பயணிகள் அதிகமானோர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுகாதார வழிக்காட்டு முறைகளை அலட்சியப்படுத்தி நடமாடுவதை காணமுடிந்தது.

நுவரெலியா பதுளை பிரதான வீதியெங்கும் வெளி மாவட்ட இலக்கத்தகடு பதிக்கப்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றமையால் பிரதான பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் அறைகள் நிரம்பி வழிந்தன இதன் காரணமாக நுவரெலியா நகர மக்கள் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து விடுமோ என்று அச்சப்படுகின்றனர்.

சுகாதார வழி முறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

டி.சந்ரு

Related Articles

Back to top button


Thubinail image
Screen