செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியாவில் அச்சுறுத்தல் : பிசிஆர் வசதி இன்றி மக்கள் அவதி; 3100 பேரின் பரிசோதனை முடிவுகள் இழுபறியில்

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை இனங் காண்பதற்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்குத் தேவையான இயந்திர வசதி இல்லை என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபை அமர்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இதனை தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 3,100 பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவற்றின் முடிவுகள் கிடைக்காமல் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நுவரெலியா மாவட்டத்தில் இருந்த ஒரேயொரு பிசிஆர் இயந்திரம் பழுதடைந்துள்ள நிலையிலேயே, பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி பிசிஆர் இயந்திரமொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைவர், செயலாளர், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவினர் ஆயுர்வேத வைத்தியரின் அனுசரணையுடன் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் மருந்துகளை விநியோகிக்க பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டங்கள் தோறும் தொற்று நீக்குவதற்கான மருந்துகளை பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com