கண்டிசெய்திகள்நுவரெலியாபதுளைமலையகம்மாத்தளை

நுவரெலியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; 122 பேர் பலி

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை வரை 24 மணித்தியாலங்களில் 51 குடும்பங்களை சேர்ந்த 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இரு கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 7,219 குடும்பங்களில் 4,777 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கொரோனா மரணம் 122 ஆக பதிவாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.

பிரதேச அடிப்படையில், அம்பகமுவையில் 43, கொத்மலையில் 16, ஹங்குராங்கெத்தயில் 02, வலப்பனையில் 14, நுவரெலியாவில் 47 என 122 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button