செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 7,876 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர். அங்கு, இதுவரை 138 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

குறித்த மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இந்நிலையில், புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் மலையகத்தில் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால், சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button