...
செய்திகள்

நுவரெலியாவில் அதிபர், ஆசிரியர் கவனயீர்ப்பு போராட்டம்

டி,சந்ரு
இன்றைய தினம் பாடசாலை ஆரம்பித்த போதிலும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கைகளை முடித்ததன் பின்னர் இன்றையதினம் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகாமையில் தமது எதிர்ப்பினை அதிபர்−ஆசிரியர் ஏற்படுத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும்,24வருட காலமாக நிலவிவரும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுதருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.  
அதன்படி, இலங்கையின் ஆசிரியர் சமூகம் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் கௌரவத்தையும், முன்னேற்றத்தையும் பாதுகாக்க இந்த நாட்டின் அதிகாரிகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம் எனவும் 
1997மற்றும் 2006ஆகிய வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பளத்திட்டத்தை அமுல்படுத்தப்படாமையை கண்டித்தும் அதிபர், ஆசிரியர் சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமை, உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாமை, கொவிட் 19குறித்து முழுமையான வசதிகள் பாடசாலைகளுக்கு செய்துக்கொடுக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம்,
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen