...
செய்திகள்

நுவரெலியாவில் சமயல் எரிவாயுவுக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றப்பட்டனர்

டி.சந்ரு செ.திவாகரன்
நுவரெலியா பிரதா நகரில் உள்ள லிட்ரோ கேஸ் களஞ்சியசாலைக்கு சமயல் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த மக்கள் கேஸ் கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்று (07) காலை 5 மணி முதல் வரிசையில் காத்திருந்து காலை  (09) மணி வரை சமயல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர் 
குறித்த  களஞ்சியசாலையில் நேற்றைய தினம் இன்று வினியோகம் செய்வதாக கூறியதை அறிந்த 150இற்கு மேற்பட்ட  நுகர்வோரே இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட சிலிண்டர்கள் இன்றைய தினம் களஞ்சியசாலைக்கு வழங்கப்படததால் நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடுத்திரும்பினர்

Related Articles

Back to top button


Thubinail image
Screen