நுவரெலியாவில் பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!
நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியை தனியார் பேருந்துக்குள் தடுத்து வைத்திருந்து அடுத்த நாளே விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், குறித்த மாணவி தான் தங்கியிருக்கும் அறைக்கு செல்வதற்காக குறித்த பேருந்தில் ஏறியுள்ளார். மாணவி பேருந்தில் கண்டி வரைக்கு அழைத்து செல்லப்பட்டு, மீண்டும் நுவரெலியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்போதே, சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,மேலும் இரவு முழுவதும் மாணவியை பேருந்துக்குள் தடுத்து வைத்திருந்து அடுத்த நாள் விடுவித்துள்ளளதாகவும் தெரிவந்துள்ளது.
மாணவி சம்பவம் தொடர்பில் தனது தாயாருக்கு கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ரம்பொட பிரதேசத்தை சேர்ந்த தென்னகோன் (33 வயது) மற்றும் கந்தபளை பிரதேசத்தை சேர்ந்த காசி விஷ்வநாதன் (31 வயது) என்பவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.