மலையகம்

நுவரெலியாவில் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு உண்மையா?

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளை 10ஆக அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.எனினும் அதற்கான பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.எனேவ இதுதொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.திலக்ராஜ் இது தொடர்பாக இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.இது தொடர்பில் பதில் வழங்கிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜ்ர அபேவர்தன, மலையகத் தலைவர்கள் கோருவது போல 15 பிரதேச செயலகங்களை அங்கு உருவாக்க முடியாது என்று குறிப்பிட்டார்.எனினும் நுவரெலியாவின் பிரதேச செயலகங்களை 10ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com