செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியாவில் பெற்றோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு.

நுவரெலியாவில் பெற்றோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

நுவரெலியா வெளிமட வீதியில் தர்மபால சுற்றுவட்டாரத்திற்கு அருகில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்திலும் நுவரெலியா கண்டி வீதியிலுள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்திலும் இன்று (20)வெள்ளிக்கிழமை சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக்ருருர கொள்ள பாவனையாளர்கள் சுகாதார வழிமுறைகளையும் மீறி ஒருவருக்கொருவர் முந்தியடித்துக்கொண்டு செல்வதை காணமுடிந்தது.

அதேபோல வாகனங்களுக்கு பெற்றோல் டீசல் பெற்றுக்கொள்வதற்கும் வாகன நெரிசலும் காணப்பட்டது. இதேவேளை நுவரெலியா பொலிஸார் வாகன நெரிசலை கட்டுப்படுத்த ஒருவழி பாதையாக மாற்றி வாகன நெரிசலை கட்டுப்படுத்தினர்.

நுவரெலியா நகர கடைகளில் மண்ணெண்ணெய் நிரப்பும் தாங்கிகள் பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்தனர்.

-டி.சந்ரு

Related Articles

Back to top button