Breaking Newsசெய்திகள்நுவரெலியா

நுவரெலியாவில் மேலும் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

நாளை காலை 4 மணி முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினப்புரி, காலி, கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 06 கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அதற்கமைய நுவரெலிய மாவட்டத்தை சேர்ந்த சந்திரிகாமம் தோட்டத்தின் NLDB விலங்குப் பண்ணை, சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

This image has an empty alt attribute; its file name is coronavirus-curfew-.jpg

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் நகர பகுதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட ஈரியவெட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் காலி மாவட்டத்திற்கு உட்பட்ட உரவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

Image

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com