மலையகம்

நுவரெலியாவில் வசந்தகால நிகழ்வுகள் இனிதே ஆரம்பித்தன

நுவரெலியா வசந்தகால நிகழ்வுகள் இன்று கோலாகலமாக பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்தியங்களுடன் ஆரம்பமாகின.

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஆரம்பமான நிகழ்வில் நுவரெலியா, பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் பாண்ட் வாத்தியங்கள் இடம்பெற்றன.

நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வசந்த கால நிகழ்வை முன்னிட்டு நுவரெலியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com