மலையகம்

நுவரெலியாவில் 13வயது பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி!

நுவரெலியா பிரதேச பிரபல பாடசாலை ஒன்றில் வகுப்பு மாணவர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் மாணவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் கூச்சலிட்டு கொண்டிருந்த போது உயர் தர மாணவர்களுக்கு கல்விகற்பிக்கும் ஆசிரியர் வந்து தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மாணவரை தாக்கியதாகவும், மாணவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ள நிலையில், இரவு நேரம் மாணவருக்கு காலில் வலி ஏற்பட்டுள்ளதுடன், மாணவர் பெற்றோரிடம் தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பெற்றோர் உடனடியாக மாணவரை நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 3வது நாள் என மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து பாடசாலை அதிபருடன் தெரிவிக்கையில், சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே இந்த சம்பவம் குறித்து தாம் அறிவதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com