மலையகம்
நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற இரு பெண்கள் மீது தாக்குதல் ?
நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற இரு பெண்கள் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சேவகர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக நுவரெலியா போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பாக நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட சென்ற இரு பெண்கள் சாப்பிடும் போது உணவு நன்றாக இல்லை என்று குறிப்பிட்டதன் காரணமாக குறித்த தாக்குதல் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சேவையாளர்களால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இந்த தாக்குதல் தொடர்பாக நுவரெலிய போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்று வருகின்றனர்.