செய்திகள்

நுவரெலியா-இரத்த தான நிகழ்வு இன்று..

நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நுவரெலியா பிரதேச சபையும் பிலக்பூல் பிரதேச இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று (15) நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிலக்பூல் பிரதேசத்தில் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கரம் கொடுப்பதற்காக இரத்த தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 
நாட்டின் தற்போதைய covid-19 கொரோன வைரஸ் தொற்றினை கருத்திக்கொண்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது இரத்த தானங்களை முறையாக வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
குறித்த இடத்திற்கு இரத்த தானம் வழங்க விரும்பியவர்கள் சென்று இரத்த தானங்கள் வழங்கி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உதவியாக அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
இந்நிகழ்வை நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ருவன் சம்பத் அவர்கள் பங்கேற்று வழி நடத்திச் செல்கின்றார்.
வேலு யோகராஜ் 
தலைவர் 
நுவரெலியா பிரதேச சபை

Related Articles

Back to top button
image download