செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் சிறுமியின் சடலம் மீட்பு !

கந்தப்பளை-ஹைபொரஸ்ட் பகுதியில் மற்றுமொறு 08 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கந்தப்பளை-ஹைபொரஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் 08 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் இவர் செல்லமாக காவியா என அழைக்கப்படுவார். (இராஜமாணிக்கம் விசாந்தினி)
வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் கழுத்தில் இறுகியிறுந்த சேலை பட்டியை அப்புறுப்படுத்திய அயலவர்கள், சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் பரிசோதித்த வைத்தியர், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் இன்று (13) காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும் சிறுமியின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button