செய்திகள்நுவரெலியா

ஹோல்புறூக் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் பொதிகள் வழங்கி வைப்பு ..

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி ஆரம்ப கல்வி சேவைகள் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான உணவுப் பொதிகள் 26ஆம் திகதி இன்று பாடசாலை அதிபர் திருமதி புஷ்பலீலா தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையில் கல்வி கற்கும் 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே சமூக இடைவெளியை பேணி இந்நிகழ்வு இடம்பெற்றது அத்தோடு பெற்றோர்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் பிள்ளைகளின் உணவு பொருட்களை பெற்று சென்றமை குறிப்பிடதக்கது.

படங்கள் அக்கரப்பத்தனை நிருபர்

Related Articles

Back to top button