செய்திகள்மலையகம்

நுவரெலியா – காளான், ஸ்டோபரி, ஆணைக்கொய்யா போன்ற சுயத்தொழில்களை மேம்படுத்த திட்டம்..

பிரதேச  அபிவிருத்திக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் விதுல சம்பத் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில்  பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக     கலந்துரையாடப்பட்டது.

இக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்  சுயத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் காளான், ஸ்டோபரி, ஆணைக்கொய்யா போன்ற சுயத்தொழில்களை ஊக்குவிப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி  ஆசிரியர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவருகின்றார்கள், எனவே அவர்களுக்கான கொடுப்பணவுகளை  இராஜாங்க அமைச்சர் வழங்கிவைத்தார். 

கொவிட்-19 பற்றிய தற்போதைய தீவிர நிலைத்தொடார்பாக விரிவாக ஆராய்ந்ததோடு கொவிட்-19 தொற்றின் செயற்பாடுகளுக்காக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்  மூலம் ரூபாய் 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவும் இந்நிதியினை கொவிட்-19 தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

மேலும் கொட்டகலை பிரதேச சபை தலைவரினால் கடந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கொட்டகலை நகரில்  பொலிஸ் நிலையம் ஒன்றினை  அமைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் முக்கிய விடயமாக ஏனைய பிரதேசங்களில்  ஐநூறு அல்லது ஆயிரம் பேருக்கு  ஒரு கிராம உத்தியோகஸ்தர் இருக்கும் நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அதிக தோட்ட பகுதிகளை   அதாவது ஆராயிரம் அல்லது ஏழாயிரம்  பேருக்கு ஒரு கிராம உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர். எதிர்காலத்தில் ஆயிரம் பேருக்கு  ஒரு கிராம உத்தியோகஸ்தரை   நியமித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில்  பாடசாலையை விட்டு இடைவிலகி தொழிலுக்கு சென்ற வயதிற்கு குறைந்த பெயர்பட்டியலை விரைவில் தயார்செய்து தரும்படியும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதேபோல் கல்வி கற்கும் வயதில் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துபவர்களுக்கு எதிராகக சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்   நுவரெலிய மாவட்ட செயலாளர் விதுல சம்பத்,  கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், அக்கரபத்தன பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன்,  தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் பாரதிதாசன்,  அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

Related Articles

Back to top button
image download