செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா – டன்சினன் வனப்பகுதியில் காணாமல் போன யுவதி கண்டுபிடிக்கப்பட்டார்.

நுவரெலியா – டன்சினன் வனப்பகுதியில் விறகு வெட்ட சென்று காணாமல் போன யுவதி ஐந்து நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.

25 வயதுடைய குறித்த யுவதி டன்சினன் வனப்பகுதியில் தனது தாயுடன் கடந்த 5ஆம் திகதி விறகு வெட்டச் சென்றுள்ளார்.
அந்த வனத்தின் கீழ் பகுதியில் விறகு தேடிவருவதாக தமது தாயிடம் கூறிச்சென்ற நிலையிலேயே குறித்த யுவதி காணாமல்போனார்.

இது தொடர்பில் குறித்த யுவதியின் தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, இராணுவத்தினர், காவற்துறையினர் மற்றும் பிரதேசமக்கள் இணைந்து அவரை தேடும் பணிகளை முன்னெடுத்தனர்.

வனப்பகுதிக்கு அருகில் உள்ள சாந்திபுர கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த யுவதி இன்றைய தினம் இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்.

Related Articles

Back to top button