செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா -டேஸ்போர்ட் கிடிமிட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாதை புனரமைப்பில் மக்களுக்கு திருப்த்தி இல்லை ..

நுவரெலியா தலவாக்கலை A 7 பிரதான பாதை கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.

டேஸ்போர்ட் கிடிமிட்டி வழியாக செல்லும் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட குறித்த பாதை புனரமைப்பு வேலைத்திட்டத்தில் குத்தகை காரர்கள் முறையாக குறித்த பாதையை அமைக்காமல் மிகவும் தரம் குறைவான விதத்தில் காபர்ட் இடப்பட்டுவருவதாதால் பாதை புனரமைப்பு செய்துவரும் காலத்திலேயே அது உடைந்து பழுதடைந்து வருவதை காணலாம் என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் டேஸ்போர்ட் பஸ் நிலையம் அருகில் முச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடத்தில் சரியான முறையில் திருத்த வேலைகளை செய்யதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

எனவே இவ்வாறன மோசமாக நடைபெறும் அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தில் முறையாக மக்கள் பணத்தை பயன்படுத்த வேண்டும் என்று குறித்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்ரு

Related Articles

Back to top button