...
காணொளிசெய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் பள்ளம்!

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் புனரமைக்கப்பட்ட பாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

ரதல்ல சந்தி முதல் நானு ஓயா சந்தி வரையிலான சுமார் 10km தூரம் கொண்ட இப்பாதை கடந்த 2 வருட காலமாக புனரமைக்கப்பட்டு நிறைவுறும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் நானு ஓயா ட்ரஸ்போட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்பாக வீதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால்; போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு வழிக்கு மட்டுப்படுத்தபட்டுள்ளது.

உடனடியாக இப்பாதை சீர்செய்யப்படாவிட்டால் பாரிய விபத்துகள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நிருபர் – டி.சந்துரு

Related Articles

Back to top button


Thubinail image
Screen