செய்திகள்

நுவரெலியா நகரில் வாகன நெரிசல் -டி .சந்ரு

டி.சந்ரு

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் நுவரெலியா நகரில்
(10) வெள்ளிக் கிழமை பெருந்திரளான மக்கள் வாகனங்களில் வருகைதந்திருந்ததை
காணமுடிந்தது. நகரில் வாகனங்கள் நிறுத்துவதற்க்கும் இட நெரிசல் காணப்பட்டது.

இதேவேளை நுவரெலியாவிலுள்ள அரச தனியார் வங்கிகள் காலை 09 மணி முதல் ஒரு மணி
வரையும் ஒரு சில வங்கிகள் பிற்பல் 3 மணி வரைக்கும் வங்கிநடவடிக்கைக்காக
திறந்து வைக்கப் பட்டிருந்தன. நுவரெலியா பிரதான தாபாலகமும் காலை 9 மணி முதல்
ஒரு மணி வரை தாபால் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது. தாபால் கந்தோரில்
முதியோர் கொடுப்பணவு வழங்கப்பட்டதோடு பதிவு தாபால்களும்
மின்சார கட்டணமும் தாபால்கத்தோரில்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று (11) தபால் கந்தோர் காலை 9 மணி முதல் ஒரு மணிவரை
திறந்திருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நகரில் ஒரு சில பலசரக்கு கடைகளும் மட்டுப்படுதப்பட்ட நிலையில்
நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்ததை காணமுடிந்தது. நகரிலுள்ள
மருந்தகளிலும் எரி பொருள் விற்பனை நிலையங்களும் வழமை போல் இயங்கியது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen